இன்று: தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தினம்!

  Newstm Desk   | Last Modified : 30 Dec, 2018 12:15 pm
on-this-day-dhoni-announced-his-immediate-retirement-from-test-cricket

2014ம்  ஆண்டு இதே நாளில் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

இந்திய கிரிக்கெட் மோசமாக இருந்த காலக்கட்டத்தில் கேப்டனாக பின்னர் பல கோப்பைகளை பெற்றுத்தந்தவர் முன்னள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் டிராவில் முடிந்த போது  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 7வது இடத்தில் இருந்தது. 

தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்கள், 256 கேட்ச்கள், 38 ஸ்டம்பிங்ஸ் செய்துள்ளார். மேலும் கேப்டனாக விளையாடிய 60 போட்டிகளில் 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 

இந்நிலையில் இதே போன்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெறுவது இது தான் முதல் முறை. மேலும் மெல்போர்ன் டெஸ்ட்டில் 37 வருடங்களுக்கு பிறகு இந்திய வெற்றி பெற்றுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close