பிரிஸ்பேன் போட்டியில் இருந்து ரஃபேல் நடால் விலகல்

  நந்தினி   | Last Modified : 28 Dec, 2017 03:10 pm


நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடால், இந்த வாரம் தொடங்கவுள்ள பிரிஸ்பேன் சர்வதேச போட்டியில் இருந்து விலகியுள்ளார். 

"இந்த ஆண்டு நான் பிரிஸ்பேன் வரமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். எனக்கும் போட்டியில் பங்கேற்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. ஆனால், நான் இன்னும் தயாராக இல்லை. ஆண்டு முழுக்க போட்டிகளில் பங்கேற்ற எனக்கு, பயிற்சி எடுக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை" என்று நடால் கூறியுள்ளார். 

ஆனால், நிச்சயமாக 2018 ஜனவரி 15ம் தேதி மெல்போர்னில் தொடங்கும் ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் கலந்து கொள்வேன் என்றும் நடால் குறிப்பிட்டார். 4ம் தேதி என்னுடைய ஆஸ்திரேலிய ரசிகர்களை சந்திப்பேன் என்றும், அன்று எனது பயிற்சி தொடங்கும் எனவும் அவர் கூறினார். வலது முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் நடால், அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு நடால், 10-வது முறையாக பிரெஞ்சு ஓபன் மற்றும் 3-வது முறையாக யுஎஸ் ஓபன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார். மேலும், இந்தாண்டை நம்பர் ஒன் இடத்திலும் முடித்துள்ளார். 16 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நடால், 4-வது முறையாக நம்பர் ஒன் இடத்தில் ஆண்டை முடிக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close