மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பினார் நோவக் ஜோகோவிச்

  நந்தினி   | Last Modified : 29 Dec, 2017 03:24 pm


அபு தாபியில் முபாடலா உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், ஆறு மாதம் ஓய்வில் இருந்த முன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பங்கேற்கிறார். போட்டியின் துவக்க ஆட்டத்தில், ஜோகோவிச், ஸ்பெயினின் பவுதிஸ்ட்டா அகட்டை எதிர்கொள்கிறார். 

கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் காலிறுதிச் சுற்றின் பாதியில், முழங்கை காயம் காரணமாக ஜோகோவிச் விலகினார். அதன் பின், இந்த ஆண்டு நடந்த எந்த ஒரு போட்டியிலும் ஜோகோவிச் கலந்து கொள்ளவில்லை. தற்போது காயத்தினால் விடுபட்டிருக்கும் அவர், ஜனவரி மாதம் துவக்கத்தில் நடக்க இருக்கும் கத்தார் ஓபன் போட்டிக்கு பயிற்சி எடுக்கும் விதமாக இப்போட்டியில் பங்கேற்றுள்ளார்.   

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸும், அபு தாபி போட்டிக்காக, மீண்டும் டென்னிஸ் களத்துக்கு வந்துள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் பட்டம் வென்றதுடன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகிய செரீனா, குழந்தை பிறந்ததும் திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் ஆஸ்திரேலியா ஓபன் போட்டிக்காக களம் காண இருக்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close