வைரலாகும் சானியாவின் நடன வீடியோ

  Anish Anto   | Last Modified : 01 Jan, 2018 08:47 am

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நடனம் ஆடும் வீடியோ இணைய தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணந்து கொண்ட பின்னரும் இந்தியாவிற்காக தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் சானியா மிர்ஸா பங்கேற்று விளையாடி வருகிறார். சமீபத்தில் இவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியாவால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் சானியா, ஓய்வு நேரத்தில் நடன பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது  2 லட்சம் முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.


இது குறித்து பேசிய சானியா, "ஜம்பெர்ஸ் நீ எனும் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் நடக்க முடியும். ஆனால் காலை திருப்பி விளையாடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. மருத்துவர்கள் சில மாத காலம் என்னை ஓய்வெடுக்க கூறி உள்ளனர். அதன் பின்னரே அறுவை சிகிச்சை செய்யலாமா அல்லது ஊசி மூலம் குணப்படுத்தலாமா என்பது குறித்து முடிவு செய்ய உள்ளனர். அடுத்த சில மாதங்களுக்கு என்னால் விளையாட முடியாது. மீண்டும் உடல் நலம் பெறுவேன் எனும் நம்பிக்கை உள்ளது. ரோஜர் பெடரரும் இதே பிரச்னையால் பாதிக்கப்பட்டு 6 மாதத்திற்கு பிறகு நலம் பெற்றார். அது போல் நானும் நலம் பெறுவேன்" என்றார். 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close