மகாராஷ்டிரா ஓபன்: பாம்ப்ரி, ராம்குமார் வெளியேற்றம்

  நந்தினி   | Last Modified : 04 Jan, 2018 12:00 pm


டாடா ஓபன் மகாராஷ்டிரா டென்னிஸ் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தோல்வி கண்டு வெளியேறினார். 

உலக தரவரிசையில் 118ம் இடத்தில் இருக்கும் பாம்ப்ரி, ஆட்டத்தின் துவக்கம் முதலே தனக்கான வாய்ப்பை வீணடித்தார். இதனால், பிரான்ஸ் வீரர் பியரி-ஹுகுஸ் ஹெர்பர்ட்டிடம் 4-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வீழ்ந்தார். 

மற்றொரு போட்டியில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 4-6, 3-6 என குரோவேஷியாவின் மரின் சிலிச்சிடம் தோல்வி அடைந்து, காலிறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தார். இதனால் இன்று நடக்கும் காலிறுதியில் சிலிச்- ஹெர்பர்ட் மோதவுள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close