ஷென்ஜென் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் மரியா ஷரபோவா

  நந்தினி   | Last Modified : 04 Jan, 2018 05:42 pm


சீனாவில் நடைபெற்று வரும் ஷென்ஜென் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு ரஷ்யாவின் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி பெற்றுள்ளார். 

கஜகஸ்தானின் சரினா தியாஸை எதிர்கொண்ட ஷரபோவா, 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று முன்னேற்றம் கண்டார். தடைக்கு பிறகு, உலக தரவரிசையில் 59-வது இடம் வரையில் முன்னேறி வந்துள்ளார் ஷரபோவா. ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ஷரபோவா, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாத தடை பெற்றார்.

கடந்த ஆண்டு முதல் போட்டியில் விளையாடி வரும் ஷரபோவா, நடக்க இருக்கும் இந்த சீஸனின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓப்பனில் கலந்து கொண்டு வெற்றி பெரும் ஆர்வத்தில் இருக்கிறார். ஷரபோவாவுடன் அரையிறுதிக்கு, சிமோன் ஹாலெப், காமெலியா பெகு, காடேரினா சினியகோவா ஆகியோரும் முன்னேறியுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close