ஹாப்மேன் கோப்பை: ரோஜர் பெடரர்- பென்சிக் சாம்பியன் பட்டம் வென்றனர்

  நந்தினி   | Last Modified : 06 Jan, 2018 08:35 pm


ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் ஹாப்மேன் கோப்பைக்கான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில், ஒரு நாட்டைச் சேர்ந்த அணியில் ஒரு வீரர்- வீராங்கனை விளையாடுவார்கள். 

இந்நிலையில், இன்று நடந்த டிசைடிங் ஃபாஸ்ட்4 கலப்பு பிரிவு ஆட்டத்தில், ஸ்விட்சர்லாந்து அணியின் ரோஜர் பெடரர்- பெலிண்டா பென்சிக், 4-3(3) 4-2 என்ற கணக்கில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸிவரேவ்- ஏஞ்சலிக் கெர்பர் இணையை வீழ்த்தி, ஹாப்மேன் கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம், ஸ்விட்சர்லாந்துக்கு மூன்றாவது முறையாக ஹாப்மேன் கோப்பையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

2001ம் ஆண்டுக்கு பிறகு, ஸ்விட்சர்லாந்து இக்கோப்பையை பெற்றது. 2001ல் ரோஜர் பெடரர்- மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து கோப்பையை வென்றிருந்தார். 1995ம் வருடம் ஜெர்மனி அணி கடைசியாக இக்கோப்பையை பெற்றது. 1993ல் முதன்முறையாக ஜெர்மனி ஹாப்மேன் கப்பை கைப்பற்றி இருந்தது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close