ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் ரோஜர் பெடரர்

  நந்தினி   | Last Modified : 11 Jan, 2018 12:09 pm


ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வருகிற 15ம் தேதி முதல் 28ந்தேதி வரை ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான இதில், ஸ்விட்சர்லாந்தின் முன்னணி வீரர் ரோஜர் பெடரர் பங்கேற்கிறார். ஆஸ்திரேலியா ஓபனில், காயம் காரணமாக பெடரர் விளையாடுவதில் சந்தேகம் இருந்த நிலையில், தற்போது அவர் விளையாடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டுக்கான விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் மற்றும் ஹாப்மேன் கப் ஆகியவற்றை கைப்பற்றியதுடன், இந்த சீசனுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெடரர் களமிறங்குகிறார்.

ஆன்டி முர்ரே, கெய் நிஷிகோரி போன்ற முன்னணி வீரர்கள், காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடாததால், பெடரருக்கு தனது 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்ற வாய்ப்புள்ளது. அதே நேரம், காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் ஸ்டான் வாவ்ரிங்கா, ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகியோர் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close