ஆஸ்திரேலியா ஓபன்: 3-வது சுற்றுக்கு ராம்குமார் தகுதி

  நந்தினி   | Last Modified : 13 Jan, 2018 07:41 pm


மெல்போர்னில் வருகிற 15ம் தேதி முதல் 28ந்தேதி வரை ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், மூன்றாவது தகுதிச் சுற்று போட்டிக்கு இன்று முன்னேறினார். முதல் தகுதிச் சுற்றில் அமெரிக்காவின் பிராட்லி க்ளஹ்னை 6-7(8), 7-6(3), 6-2 என்று வீழ்த்திய 28ம் நிலை வீரர் ராம்குமார், 2-வது சுற்றில் பிரான்சின் க்ளெப் சஹாரோவுடன் மோதினார். இரண்டு மணி நேரம் நடந்த இந்த போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராம்குமார், 6-4, 7-6, (12) என்ற கணக்கில் சஹாரோவை தோற்கடித்து, மூன்றாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close