ஆஸ்திரேலியா ஓபன்: வாய்ப்பை தவறவிட்ட பாம்ப்ரி

  நந்தினி   | Last Modified : 16 Jan, 2018 10:41 am


மெல்போர்னில் நேற்று ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கியது. இப்போட்டியில், இந்திய வீரர் யுகி பாம்ப்ரி பங்கேற்றார். பிரதான சுற்றுக்கு முன்னேறுவதற்கான மூன்று தகுதிச் சுற்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். நேற்றைய துவக்க போட்டியில் சைப்ரஸ் வீரர் மார்கோஸ் பாக்தாதிஸை, பாம்ப்ரி எதிர்கொண்டார். 123ம் நிலை வீரரான மார்கோஸ், 119ம் நிலை வீரரான பாம்ப்ரியை  6-7 (4-7), 4-6, 3-6 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதனால், கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கான வாய்ப்பை பெற்றும், அதனை தவறவிட்டு முதல் சுற்றிலேயே  பாம்ப்ரி வெளியேறினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close