ஆஸ்திரேலியா ஓபன்: நடால், ஷரபோவா வெற்றி

  நந்தினி   | Last Modified : 16 Jan, 2018 11:44 am


2018 ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் நேற்று மெல்போர்னில் தொடங்கியது. 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால் 6-1, 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில், 81-வது இடம் வகிக்கும் விக்டர் எஸ்ட்ரெல்லா பர்கோஸை எளிதில் வீழ்த்தி, 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு ஆட்டத்தில், 8ம் நிலை வீரர் ஸ்டான் வாவ்ரிங்கா 6-3, 6-4, 2-6, 7-6 (7-2) என்ற கணக்கில் 136ம் இடம் வகிக்கும் லூதியானாவின் ரிக்கார்டாஸ் பேரன்கிஸை தோற்கடித்து, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். 

பெண்கள் ஒற்றையர் துவக்கப் போட்டியில், 47-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-1, 6-4 என்ற நேர்செட்களில் 48ம் நிலை வீராங்கனை ஜெர்மனைச் சேர்ந்த டாட்ஜனா மரியாவை வீழ்த்தினார். 


நம்பர் ஒன் வீராங்கனை ஜெர்மனின் ஏஞ்சலிக் கெர்பர் 6-0, 6-4 என சக நாட்டைச் சேர்ந்த அன்னா-லேனாவை தோற்கடித்து, இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம் கண்டார். 

இவர்களை தவிர, பிரான்சின் கரோலின் கார்சியா, இங்கிலாந்தின் ஜோஹன்னா கொன்டா, ரஷ்யாவின் எலெனா வெஸ்னினா, கனடாவின் பௌசர்ட், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, பார்போரா ஸ்ட்ரிகோவா ஆகிய முன்னணி வீராங்கனைகளுக்கு துவக்க போட்டியில் வெற்றி பெற்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close