ஆஸ்திரேலியன் ஓபன்: ஷரபோவா இன், முகுருசா அவுட்

  நந்தினி   | Last Modified : 18 Jan, 2018 12:56 pm


மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு மரியா ஷரபோவா முன்னேறினார். 

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி தடைக்கு பிறகு, தன்னுடன் போட்டி போடுவருக்கு தான் ஒரு கடுமையான போட்டியாளர் என்று நிரூபித்து வருகிறார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஷரபோவா, தற்போது தரவரிசையில் மிகவும் பின்தங்கி இருக்கிறார். 

இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில், 14ம் நிலை வீராங்கனை லாத்வியாவின் அனஸ்தஸிஜா செவஸ்டோவாவை 6-1, 7-6 (7/4) என்ற கணக்கில் ஷரபோவா வென்றார். அடுத்த சுற்றில் ஷரபோவா, ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொள்ள உள்ளார். 

மற்றொரு ஆட்டத்தில் 3ம் நிலை வீராங்கனை கார்பின் முகுருசா, தைவானின் ஹசி சு-வெய்யை எதிர்கொண்டார். 59 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் சு-வெய், 7-6 (7/1), 6-4 என்ற கணக்கில் முகுருசாவை வென்றார். 3-வது சுற்றில், ரட்வன்ஸ்காவுடன், சு-வெய் மோதுகிறார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close