ஆஸ்திரேலியா ஓபன்: முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா வெளியேற்றம்

  நந்தினி   | Last Modified : 18 Jan, 2018 05:40 pm


ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து 8ம் நிலை வீரர் ஸ்டான் வாவ்ரிங்கா வெளியேற்றப்பட்டார். இன்று நடந்த இரண்டாம் சுற்று ஆட்டத்தில், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா- அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரேன் மோதினர்.

இப்போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய 97-வது இடம் வகிக்கும் சான்ட்கிரேன், முடிவில் 6-2, 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று, முன்னாள் ஆஸ்திரேலியா சாம்பியன் வாவ்ரிங்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

ஆறு மாதங்களுக்கு முன்பு, இடதுகாலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட வாவ்ரிங்கா, போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா ஓபன் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற கண்காட்சி போட்டியில் இருந்து விலகிய வாவ்ரிங்கா, 

ஆஸி ஓபன் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 2ம் சுற்றில் தோல்வியுற்றது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close