ஆஸ்திரேலியா ஓபன்: நம்பர் ஒன் நடால், ஹாலெப் முன்னேற்றம்

  நந்தினி   | Last Modified : 20 Jan, 2018 03:11 pm


2018 சீஸனின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது. 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடால், 6-1, 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் போஸ்னியன் வீரர் தாமிர் டிஸுமஹரை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்சவார்ட்ஸ்மானுடன் நடால் மோதுகிறார். 

ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், குரோவேஷியாவின் மரின் சிலிக், பல்கேரியாவின் க்ரிகோர் டிமிட்ரோவ், இத்தாலியின் அண்ட்ரெஸ் செப்பி, ஆஸ்திரியாவின் டோமினிக் தியம், இத்தாலியின் பாபியோ போக்னினி ஆகியோரும் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.


பெண்கள் ஒற்றையரில், நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப்  4-6, 6-4, 15-13 என்ற கணக்கில் அமெரிக்காவின் லாரன் டேவிஸை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். அடுத்த சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொள்கிறார். 

பிரான்சின் கரோலின் கார்சியா, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்க்கோவா, பார்போரா ஸ்ட்ரிக்கோவா, டேனிஷ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோரும் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close