ஆஸ்திரேலியா ஓபன்: ஷரபோவா தோல்வி; பெடரர், ஜோகோவிச் வெற்றி

  நந்தினி   | Last Modified : 20 Jan, 2018 10:54 pm


ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர், ஜோகோவிச், கெர்பர் ஆகியோர் நான்காவது சுற்றுக்குள் நுழைந்துள்ளனர். 

தரவரிசையில் 2ம் இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர், 6-2, 7-5, 6-4 கணக்கில் பிரான்சின் ரிச்சர்ட் கஸியூட்டை இரண்டு மணி நேரம் நடந்த போட்டியில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் ஹங்கேரியாவின் மர்டோனை பெடரர் எதிர்கொள்கிறார். 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை  வென்றுள்ள பெடரர், ஆஸ்திரேலியா ஓபன் போட்டி 4-வது சுற்றுக்கு, 16-வது முறையாக தகுதி பெற்றுள்ளார். 

முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச், 6-2, 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஸ்பெயினின் ராமோஸ்-வினோலஸை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். நான்காவது சுற்றில், தென் கொரியாவின் சுங் ஹ்யேனுடன், ஜோகோவிச் மோதுகிறார். 

பெண்கள் பிரிவில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை 6-1, 6-3 என வீழ்த்தி, 4-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close