ஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதியில் ரஃபேல் நடால்

  நந்தினி   | Last Modified : 22 Jan, 2018 11:18 am


ஆஸ்திரேலியா ஓபன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால் முன்னேறினார். 

4-வது சுற்றில் 26ம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் டியாகோ செபாஸ்டியனை, 3 மணி நேரம் 51 நிமிட ஆட்டத்திற்கு பிறகு 6-3, 6-7 (4-7), 6-3, 6-3 என்ற கணக்கில் வென்றார். காலிறுதியில் 4ம் நிலை வீரர் குரோவேஷியாவின் மரின் சிலிக்குடன், நடால் மோதுகிறார். 

3ம் நிலை வீரர் பல்கேரியாவின் க்ரிகோர் டிமிட்ரோவ், 7-6 (7-3), 7-6 (7-4), 4-6, 7-6 (7-4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸுக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தார். காலிறுதிப் போட்டியில் டிமிட்ரோவ், எட்மண்ட்டை எதிர்கொள்கிறார். எட்மண்ட், 4-வது சுற்றில் இத்தாலியின் அண்ட்ரெஸ் செப்பியை வீழ்த்தியிருந்தார்.

பெண்கள் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் ஜெர்மனின் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, டேனிஷின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close