ஆஸ்திரேலியா ஓபன் காலிறுதியில் 14-வது முறையாக நுழைந்த பெடரர்

  நந்தினி   | Last Modified : 22 Jan, 2018 02:43 pm


சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 2ம் இடம் வகிக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியா ஓபன் காலிறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

இன்று நடந்த நான்காவது சுற்றுப் போட்டியில், 80ம் நிலை வீரர் ஹங்கேரியாவின் மார்ட்டன் பியூசிசோவிஸை 6-4 7-6(3) 6-2 என்ற கணக்கில் பெடரர் வீழ்த்தினார்.  இதன் மூலம், ஆஸ்திரேலியா ஓபன் போட்டியின் காலிறுதிக்கு 14-வது முறையாக தகுதி பெற்றுள்ளார். காலிறுதிச் சுற்றில் செக் குடியரசின் தாமஸ் பெர்டய்ச்சை, பெடரர் எதிர்கொள்கிறார். 

1977ம் ஆண்டுக்கு பிறகு, ஆஸ்திரேலியா ஓபன் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குள் நுழையும் பழமையான வீரர் பெடரர் ஆவார். 1977ம் வருடம்  கென் ரோஸ்வால் என்ற பழமையான வீரர் காலிறுதியை எட்டி இருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close