ஆஸ்திரேலியா ஓபன்: ஜோகோவிச் அவுட்; ஹாலெப், கெர்பர் இன்

  நந்தினி   | Last Modified : 22 Jan, 2018 05:35 pm


ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் வெளியேறினார். இன்று நடந்த நான்காவது சுற்றில் 58-வது இடம் வகிக்கும் தென் கொரியாவின் ஹ்யேன் சுங்,  7-6 (4), 7-5, 7-6 (3) என்ற கணக்கில்  வெற்றி பெற்று, 6 முறை சாம்பியனான ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

பெண்கள் பிரிவில், முன்னாள் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் 4-6, 7-5, 6-2 என்ற கணக்கில் 88ம் நிலை வீராங்கனை தைவானின் ஹசிஎ சு-வெய்யை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை தோற்கடித்து, காலிறுதிக்குள் நுழைந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close