ஆஸ்திரேலியா ஓபன்: அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை ஹாலெப்

  நந்தினி   | Last Modified : 24 Jan, 2018 04:12 pm


ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதி சுற்று போட்டிக்கு நம்பர் ஒன் வீராங்கனை ரோமானியாவின் சிமோனா ஹாலெப் தகுதி அடைந்துள்ளார். 

காலிறுதியில் இன்று 6ம் நிலை வீராங்கனை செக் குடியரசின் கரோலினா பிளிஸ்க்கோவாவுடன் போட்டியிட்ட ஹாலெப், 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியனான முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பருடன், அரையிறுதி ஆட்டத்தில் ஹாலெப் மோத இருக்கிறார். 

டேனிஷ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில், பெல்ஜியம் வீராங்கனை மெர்டென்ஸுடன், வோஸ்னியாக்கி மோதுகிறார். 

ஆண்கள் பிரிவில், இங்கிலாந்து வீரர் எட்மண்ட், தென் கொரியாவின் ஹ்யேன் சுங் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளார்கள். நேற்று நடந்த காலிறுதியில் நம்பர் ஒன் வீரர் நடால் வெளியேறியதால், சிலிக் அரையிறுதிக்கு முன்னேறினார். 

இன்று நடக்கும் காலிறுதி ஆட்டத்தில், தரவரிசையில் 2ம் இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்- செக் குடியரசு வீரர் தாமஸ் பெர்டய்ச்சை எதிர்கொள்ள இருக்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close