நெதர்லாந்துக்கு எதிராக களமிறங்கும் செரீனா வில்லியம்ஸ்

  நந்தினி   | Last Modified : 24 Jan, 2018 06:31 pm


முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், மீண்டும் டென்னிஸ் களத்துக்கு அடுத்த மாதம் திரும்புகிறார். 

கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்ததால், ஆஸ்திரேலியா ஓபன் போட்டியுடன் டென்னிஸில் இருந்து செரீனா பிரேக் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு, திருமணம் செய்து கொண்ட அவர், நடப்பாண்டு ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் பங்கேறுவதற்கு முன், கண்காட்சி போட்டியில் விளையாடினார். ஆனால், அதில் தோல்வி அடைந்த செரீனா, தனக்கு இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது என்று தெரிவித்தார். 

இந்த நிலையில், அடுத்த மாதம் யூனிடேட் ஸ்டேட்ஸ் பெட் கோப்பை முதல் சுற்று டையில் நெதர்லாந்துக்கு எதிராக களமிறங்க இருப்பதாக யுஎஸ் டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது. யுஎஸ்-ன் நார்த் கரோலினாவில், அஷேவில்லே உள்ளரங்கத்தில் பிப்ரவரி 10-11 தேதிகளில் இப்போட்டி நடைபெற இருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close