ஆஸி. ஓபன் அரையிறுதி: கெர்பரை வீழ்த்தினார் சிமோனா ஹாலெப்

  நந்தினி   | Last Modified : 25 Jan, 2018 02:34 pm


ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்று போட்டிக்கு நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் முன்னேறினார். 

டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரோமானியாவின் சிமோனா ஹாலெப், அரையிறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஜெர்மனின் ஏஞ்சலிக் கெர்பரை சந்தித்தார். 2 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், ஹாலெப் 6-3 4-6 9-7 என்ற கணக்கில் கெர்பரை வீழ்த்தி, இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். 

இறுதிப் போட்டியில், 2ம் நிலை வீராங்கனை டேனிஷின் கரோலின் வோஸ்னியாக்கியுடன், ஹாலெப் மோதுகிறார். 27ம் தேதி இறுதிச் சுற்று ஆட்டம் நடக்க இருக்கிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close