இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதி போட்டியில், நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். அவருடன் போட்டியிட்ட தென் கொரிய வீரர் சங் ஹியோன், காயம் காரணமாக வெளியேற, பெடரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பெடரர் 6-1, 5-2 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இறுதி போட்டியில், க்ரோவேஷியா நாட்டின் மரின் சிலிச்சுடன் பெடரர் மோதுகிறார்.