ஆஸ்திரேலிய ஓபன்: போபண்ணா ஜோடி பைனலில் தோல்வி

  SRK   | Last Modified : 28 Jan, 2018 02:56 pm


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் கோப்பைக்கான இறுதிப் போட்டியில், இந்திய  வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஹங்கேரி நாட்டை சேர்ந்த டிமியா பாபோஸ் ஜோடி இன்று விளையாடியது. க்ரோவேஷிய வீரர் மேட் பாவிச் மற்றும் கனடா நாட்டை சேர்ந்த காப்ரியெல்லா டப்ரோஸ்கி ஜோடிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில்,  உலகின் 5ம் நிலை ஜோடியான போபண்ணா - பாபோஸ் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் சேட்டை போபண்ணா ஜோடி கைப்பற்றியது. ஆனால், அதன் பின் அசத்தலாக விளையாடிய பாவிச் - டப்ரோஸ்கி ஜோடி அடுத்த செட்டை கைப்பற்றியது. கடுமையாக போராடிய போபண்ணா ஜோடி, 6-2, 4-6, 9-11 என்ற செட் கணக்கில் தோற்றது.

கடந்த வருடம் நடந்த பிரென்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close