20வது கிராண்ட் ஸ்லாம் வென்றார் பெடரர்

  SRK   | Last Modified : 28 Jan, 2018 09:05 pm


இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

க்ரோவேஷிய வீரர் மரின் சிலிச்சை எதிர்கொண்ட பெடரர் 6-2, 6-7 (5-7), 6-3, 3-6, 6-1 என வென்றார். தனது 36வது வயதில் இருக்கும் பெடரர், சரியான போட்டிகளை தேர்ந்தெடுத்து போட்டியிடுவதால் உச்சத்தில் இருக்க முடியும் என கூறியுள்ளார். "எல்லா போட்டிகளிலும் விளையாடாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்தால் தொடர்ந்து வெல்ல முடியும். பயிற்சி எடுப்பது எனக்கு பிடிக்கும். பயணம் செய்வது எனக்கு பிடிக்கும். என்னை சுற்றி உள்ள பயிற்சியாளர்கள் மிகவும் தேர்ந்தவர்கள்" என்றார் பெடரர்.

இது ரோஜர் பெடரர் வெல்லும் 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். 2012ம் ஆண்டிற்கு பின் ஏற்பட்ட நீண்ட இடைவேளைக்கு பிறகு, கடந்த வருடம் இதே ஆஸ்திரேலியன் ஓபன் பட்டம் வென்றார் பெடரர். அதன்பின் 2017ம் ஆண்டின் விம்பிள்டன் வென்று, தற்போது மறுபடியும் 2018ம் ஆண்டின் ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வென்று உலக அளவில் தனது இணையில்லா சாதனையை நீட்டித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close