சென்னை ஓபன்: இறுதிச் சுற்றில் யுகி பாம்ப்ரி

  நந்தினி   | Last Modified : 16 Feb, 2018 05:57 pm


சென்னையில் 2018 ஏடிபி சேலஞ்சர் டூர் போட்டி, கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி நாளை (17ம் தேதி) முடிவு பெறுகிறது. இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் நடந்த அரையிறுதியில், கொரியாவின் டக்கீ லீயை 7-5, 6-2 என்ற கணக்கில் பாம்ப்ரி வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்ஸன் 6-1, 7-6 என ஸ்பெயினின் பெட்ரோ மார்டிநெஸை தோற்கடித்தார். நாளை நடக்கும் இறுதிச் சுற்று போட்டியில் யுகி பாம்ப்ரி, ஜோர்டான் தாம்ப்ஸனுடன் மோதுகிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close