அதிக வயதான நம்பர் ஒன் வீரரானார் ரோஜர் பெடரர்!

  நந்தினி   | Last Modified : 17 Feb, 2018 02:28 pm


நெதர்லாந்தில் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பங்கேற்றிருந்த உலகத்தின் நம்பர் 2 வீரர் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், நேற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

காலிறுதியில் 4-6, 6-1, 6-1 என்ற கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹாஸேவை வீழ்த்தி பெடரர் அரையிறுதிக்கு முன்னேறினார். கடைசியாக 2013ம் ஆண்டு ரோட்டர்டாம் ஓபன் போட்டியில் பங்கேற்றிருந்த பெடரர், 2012 மற்றும் 2015ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். 

அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பெடரர்(36) பிடித்தார். இதனால், தரவரிசையில் முதலிடம் பிடித்த அதிக வயதான வீரர் என்ற பெருமையை பெற்றார்.


மேலும், 2003ம் ஆண்டு தனது 33 வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்த அமெரிக்காவின் ஆண்ட்ரே அகஸ்ஸியின் சாதனையை பெடரர் முறியடித்தார். 1990ம் ஆண்டு இவான் லெண்டில் 30 வயதிலும், 1983ல் ஜிம்மி கார்னர்ஸ் 30 மற்றும் 2017ல் ரஃபேல் நடால் 31 வயதிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறார்கள். 

2004ம் ஆண்டு பெடரர் முதல்முறையாக முதலிடத்தை பிடித்திருந்தார். பிப்ரவரி 2004- ஆகஸ்ட் 2008; ஜூலை 2009- ஜூன் 2010; ஜூலை 2012- நவம்பர் 2012 ஆகிய காலகட்டங்களிலும் பெடரர் முதலிடத்தில் இருந்துள்ளார். 

சமீபத்தில் ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை வென்ற பெடரர், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, அதிக கிராண்ட்ஸ்லாம்களை கைப்பற்றிய வீரர்களில் 4ம் இடத்தை பிடித்தார். அதில், ஆடவர் பிரிவில், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் வீரர் பெடரர் தான்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close