ரோட்டர்டாம் கோப்பையை வென்றார் பெடரர்!

  SRK   | Last Modified : 19 Feb, 2018 01:30 pm


ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ரோட்டர்டாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்.

அரையிறுதிக்கு முன்னேறியபோது, உலகின் நம்பர் ஒன் வீரரான பெடரர், இறுதி போட்டியில் பல்கேரியா நாட்டை சேர்ந்த க்ரிகோர் டிமிட்ரோவை 6-2, 6-2 என்ற  நேர் செட் கணக்கில் துவம்சம் செய்தார். 

தனது 36வது வயதில் சர்வதேச தரவரிசை பட்டியலில் உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற கிரீடத்தை மீண்டும் பெற்ற பெடரர், உலகின் 'முதிய நம்பர் ஒன் வீரர்' என்ற பெருமையையும் பெற்றார். இந்த ரோட்டர்டாம் தொடரின் வெற்றியின் மூலம் தனது 97வது சாம்பியன் பட்டத்தை பெடரர்ர் வென்றுள்ளார். 

"இந்த வாரம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. கடந்த வாரம் வரை, அரையிறுதிக்கு முன்னேறுவது மட்டும் தான் எனது குறிக்கோளாக இருந்தது. ஆனால், தற்போது பட்டத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. என் வாழ்வின் சிறந்த வாரங்களில் இது ஒன்றாகும்" என்றார்.

20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரர், கடைசியாக 2012ம் ஆண்டு முதலிடத்தில் இருந்தார். பின்னர், ஃபார்ம் இழந்தது, காயம் போன்ற காரணங்களால், நடால், ஜோகோவிச் ஆகிய நட்சத்திர வீரர்களின் ஆதிக்கத்தை பின்னால் இருந்து பெடரர் பார்த்து வந்தார். கடந்த வருடம் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றது முதல் மீண்டும் டென்னிஸ் உலகில் தனது பெயரை நிலைநிறுத்தியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close