இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்: பெடரர் வெற்றி, ஜோகோவிச் தோல்வி

  நந்தினி   | Last Modified : 12 Mar, 2018 05:26 pm


கலிஃபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். அதே சமயம், இந்தியன் வெல்ஸின் ஐந்து முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தோல்வி அடைந்து வெளியேறினார். 

ஒற்றையர் பிரிவில் அர்ஜென்டினாவின் பெடெரிகோ டெல்போனிஸை 6-3, 7-6 (8/6) என்ற கணக்கில் பெடரர் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் பெடரர், செர்பியாவின் பிலிப் க்ராஜினோவிசுடன் மோதுகிறார். 

மற்றொரு ஆட்டத்தில், தரவரிசையில் 109ம் இடம் வகிக்கும் ஜப்பானின் தாரோ டேனியல் 7-6 (7/3), 4-6, 6-1 என்ற கணக்கில் 13-வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச்சை வீழ்த்தினார். இதனால், போட்டியில் இருந்து ஜோகோவிச் வெளியேற்றப்பட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close