இந்தியன் வெல்ஸ்: காலிறுதியில் சிமோனா ஹாலேப்

  நந்தினி   | Last Modified : 14 Mar, 2018 11:41 am


நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ரோமானியாவின் சிமோனா ஹாலேப், இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். 

நான்காவது சுற்று ஆட்டத்தில், சீனாவின் வாங் க்கிங்கை 7-5, 6-1 என்ற கணக்கில் ஹாலேப் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். நாளை நடைபெற இருக்கும் காலிறுதியில் ஹாலேப், குரோவேஷியாவின் பெட்ரா மார்டிக்குடன் மோதுகிறார்.

மற்ற போட்டிகளில், 8ம் நிலை வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், 5ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்க்கோவா, நம்பர் 2 வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 

ஹாலேப் மற்றும் வோஸ்னியாக்கி இடையே முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்வது யார் என்ற போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொடரின் இறுதிச் சுற்றை எட்டினால், ஹாலேப் முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்வார். கடந்த 2015ம் ஆண்டு இந்தியன் வெல்ஸ் சாம்பியன் பட்டத்தை ஹாலேப் வென்றிருந்தார். வோஸ்னியாக்கி 2011ல் கைப்பற்றியிருந்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close