இந்தியன் வெல்ஸ்: நம்பர் 2 வீராங்கனை வோஸ்னியாக்கி வெளியேற்றம்

  நந்தினி   | Last Modified : 14 Mar, 2018 04:13 pm


இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து உலக தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி வெளியேற்றப்பட்டார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில், இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில், 19வது இடத்தில் உள்ள வீராங்கனையான ரஷ்யாவின் தாரியா கேசட்கினாவை, வோஸ்னியாக்கி எதிர்கொண்டார். 40 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் கேசட்கினா, 6-4, 7-5 என்ற கணக்கில் வோஸ்னியாக்கிற்கு அதிர்ச்சி தோல்வி அளித்துக் காலிறுதிக்குள் நுழைந்தார். 

மெல்போர்னில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைச் சமீபத்தில் கைப்பற்றிய வோஸ்னியாக்கி, தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்திருந்தார். அதன்பின், முதல் இடத்தைச் சிமோன் ஹாலேப் தட்டிப் பறித்தார். தற்போது நடைபெறும் டென்னிஸ் போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் முதல் இடத்தைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வோஸ்னியாக்கி வெளியேறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close