மியாமி ஓபன்: நம்பர் 2 வோஸ்னியாக்கி தோல்வி

  நந்தினி   | Last Modified : 24 Mar, 2018 04:00 pm


உலகின் நம்பர் 2 டென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி, மியாமி ஓபன் போட்டியில் இருந்து வெளியேறினார். ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியனான வோஸ்னியாக்கியை 0-6, 6-4, 6-4 என்ற கணக்கில் புயெர்டோ ரிஸான் வீராங்கனை மோனிகா ப்யுக் வென்றார். 

ப்யுக், 2016 ரியோ கோடைகால போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். வோஸ்னியாக்கி, இந்த ஆண்டு துவக்கத்தில், மெல்போர்னில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அவர் இறுதிச் சுற்று போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப்பை வென்றிருந்தார்.

மற்ற போட்டியில் முன்னணி வீராங்கனைகளான உக்ரைனின் எளிய ஸ்விடோலினா, செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close