ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி; பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகுகிறார்

  நந்தினி   | Last Modified : 26 Mar, 2018 11:51 am


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புஃளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் ஆண்கள் பிரிவில், நம்பர் ஒன் வீரர் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தகுதிச் சுற்று வீரர் ஆஸ்திரேலியாவின் தனாசி கொக்கின்கீஸை எதிர்கொண்டார். இதில், 175-வது இடம் வகிக்கும் கொக்கின்கீஸ் 3-6 6-3 7-6 (7-4) என்ற கணக்கில் நம்பர் ஒன் வீரர் பெடரருக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தார்.

அண்மையில் இந்தியன் வேல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் பெடரர் தோல்வி கண்டார். கடந்த ஒரே வாரத்தில் இரு தோல்விகளை கண்ட பெடரர், நடக்க இருக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலக உள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், விம்பிள்டன் ஓபன் போட்டியில் தனது முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறார்.

கடந்த ஆண்டும் பெடரர் இதே முடிவை எடுத்தார். அதன் மூலம், விம்பிள்டன் ஓபன் பட்டத்தையும் அவர் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார். பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருந்து விலகுவதனால், பெடரர் தனது நம்பர் ஒன் இடத்தை இழப்பார். இதனால், 2-வது இடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் முதலிடத்தை பிடிப்பார். காயத்தில் இருந்து மீண்டுள்ள நடால், பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாடுகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close