மியாமி ஓபன்: ஜான் இஸ்னர், ஸ்டீபன்ஸ் பட்டம் வென்றனர்

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2018 11:58 am


அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. நேற்று ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிச் சுற்று ஆட்டத்தில், அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 6-7 (4), 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஜெர்மனின் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். 

மியாமி ஓபன் பட்டத்தை 2010ம் ஆண்டிற்கு பிறகு வெல்லும் முதல் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் ஆவார். ஜானுக்கு முன், அன்டி ரொட்டிக் பட்டத்தை கைப்பற்றியிருந்தார். 14-வது இடம் வகிக்கும் ஜானிற்கு, அவரது 14 வருட டென்னிஸ் வாழ்க்கையில் இது தான் மிகப்பெரிய வெற்றியாகும்.

பெண்கள் பிரிவில், அமெரிக்காவின் ஸ்லோவானே ஸ்டீபன்ஸ் 7-6 (5), 6-1 என்ற கணக்கில் லாட்வியாவின் ஜெலீனா ஒஸ்டாபென்கோவை வென்று, பட்டத்தை கைப்பற்றினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close