பெண்கள் டென்னிஸ்: டாப் 10-க்குள் நுழைந்த மியாமி சாம்பியன் ஸ்டீபன்ஸ்

  நந்தினி   | Last Modified : 02 Apr, 2018 06:28 pm


பெண்கள் டென்னிஸ் சங்கம் இன்று புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மியாமி ஓபன் பட்டம் வென்ற அமெரிக்காவின் ஸ்லோவானே ஸ்டீபன்ஸ், டாப் 10 இடங்களுக்குள் முன்னேற்றம் கண்டுள்ளார்.

நேற்று அமெரிக்காவில் நடந்த மியாமி ஓபன் இறுதிச் சுற்றில் ஸ்டீபன்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம், மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு, தரவரிசையில் 9-வது இடத்திற்கு ஸ்டீபன்ஸ் முன்னேறினார். அவரது டென்னிஸ் கரியரில் முதன்முறையாக இந்த இடத்தை பிடித்திருக்கிறார். 

ரோமானியாவின் சிமோனா ஹாலேப் 8,140 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6,790 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

ஸ்டீபன்ஸ் முன்னேறியதால், பெட்ரா கிவிடோவா (10-வது), ஏஞ்சலிக் கெர்பர் (11-வது), தாரியா கசாட்கினா (12-வது) ஆகியோர் ஒரு இடம் சரிந்தனர். ஸ்டீபன்ஸ் தோற்கடித்த ஒஸ்டாபென்கோ, மீண்டும் தனது 5-வது இடத்தை பிடித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close