டேவிஸ் கோப்பை: இந்திய வீரர்கள் ராம்குமார், சுமித் தோல்வி

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2018 02:49 pm


சீனாவின் தியான்ஜின் நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இன்று தொடங்கியது. போட்டியின் துவக்க ஆட்டத்திலேயே இந்திய ஒற்றையர் பிரிவு வீரர்கள் ராம்குமார் ராமநாதன் மற்றும் சுமித் நகல் தோல்வி அடைந்தனர். 

முதல் ஒற்றையர் பிரிவு போட்டியில் ராம்குமார் ராமநாதன், சீனாவின் இபிங் வு-உடன் மோதினார். ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் ராம்குமார் 6-7, 4-6 என்ற கணக்கில் தோல்வி கண்டார். இதனை தொடர்ந்து நடந்த இரண்டாவது ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், சுமித் நகல்- ஸி ஜாங் எதிர்கொண்டனர். ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் ஜாங்கிடம் 4-6, 1-6 என்ற கணக்கில் ஸ்மித் வீழ்ந்தார்.

இதனால் சீனா அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. ஆசிய அளவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய பெற்ற முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது. டேவிஸ் கோப்பை போட்டியில் நாளை நடக்கும் இரட்டையர் பிரிவு போட்டியில் சீனாவுக்கு எதிராக இந்திய இணை ரோஹன் போபண்ணா- லியாண்டர் பயஸ் போட்டியிடுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close