உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், 11-வது பார்சிலோனா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஸ்பெயினின் கேட்டலோனியா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற உலகின் நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால், இறுதிச் சுற்று போட்டியில் கிரீக் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானோஸ் ட்சிட்சிபாசுடன் மோதினார். 77 நிமிடங்கள் நடந்த இப்போட்டியின் முடிவில் 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் ட்சிட்சிபாசை வீழ்த்தி பட்டத்தை தனதாக்கிக் கொண்டார். 2005ம் ஆண்டு முதல் பார்சிலோனா ஓபன் இறுதிச் சுற்று போட்டியாளராக நடால் இருந்துள்ளார்.
இது நடாலின் 11-வது பார்சிலோனா டைட்டிலாகும். கடந்த வாரம் நடால், 11-வது மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் பட்டத்தை கைப்பற்றினார். இதுவரை நடால் 77 சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.