பெடரருக்கு ஷாக் கொடுத்த டெல் போட்ரோ

  SRK   | Last Modified : 19 Mar, 2018 10:00 am


அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் கோப்பையில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரரை, அர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோ வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று அதிரடியாக டென்னிஸ் உலகின் கவனத்தை மீண்டும் கைப்பற்றிய ரோஜர் பெடரர், சர்வதேச தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு இந்தியன் வெல்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற பெடரர் இந்த ஆண்டு பைனலில், அர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோவுடன் மோதினார். உச்ச கட்ட பார்மில் இருக்கும் பெடரர் மீண்டும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், 6-4, 7-5, 7-6(7-2) என்ற செட் கணக்கில் போராடி பெடரரை வீழ்த்தினார் டெல் போட்ரோ. "என்னால் இதை நம்பவே முடியவில்லை. இப்படி ஒரு பைனல் போட்டியில் பெடரரை வீழ்த்துவேன் என எதிர்பார்க்கவே இல்லை. இருவரும் மிக சிறப்பாக விளையாடினோம்" என்று கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close