மியாமி ஓபன்: முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்ட செரீனா வில்லியம்ஸ்

  நந்தினி   | Last Modified : 22 Mar, 2018 12:26 pm


முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், மியாமி ஓபன் போட்டியில் இருந்து வெளியேறினார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவு முதல் சுற்றில், செரீனா, ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 17 நிமிடம் நடந்த இந்த போட்டியில் ஒசாகா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் செரீனாவை வீழ்த்தினார். 

சுமார் 13 மாதங்கள் பேறுகால விடுமுறையை முடித்து களம் திரும்பியிருக்கும் செரீனாவுக்கு, இது இரண்டாவது டோர்னமெண்ட் ஆகும். 

செரீனா, 21 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவின் டென்னிஸ் கோர்ட்டில் முதன்முறையாக முதல் சுற்றிலேயே வெளியேறியிருக்கிறார். இந்த தோல்விக்கு பிறகு செரீனா செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார். அதனால் அவருக்கு டென்னிஸ் சங்கம், ஆயிரம் டாலரை அபராதமாக விதிக்கும் என்று தெரிகிறது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close