மியாமி ஓபன்: சிமோனா ஹாலேப், கெர்பர் முன்னேற்றம்

  நந்தினி   | Last Modified : 23 Mar, 2018 03:32 pm


அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு நம்பர் ஒன் வீராங்கனை ரோமானியாவின் சிமோனா ஹாலேப் முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், பிரான்சின் ஓசானி டோடினுடன் ஒரு மணி நேரம் போராடிய ஹாலேப், முடிவில் 3-6, 6-3, 7-5 என்ற கணக்கில்  வெற்றி பெற்றார். நாளைய போட்டியில் பொலிசியாவின் ராட்வன்ஸ்காவுடன், சிமோனா மோதுகிறார். 

மற்றொரு போட்டியில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்வீடன் வீராங்கனை ஜோஹன்னா லார்சனை தோற்கடித்து, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார். இதே போல், இரண்டு முறை மியாமி சாம்பியனான பெலருசியனின் விக்டோரியா அசரென்காவும் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close