மியாமி ஓபன்: நோவக் ஜோகோவிச் வெளியேற்றம்

  நந்தினி   | Last Modified : 24 Mar, 2018 01:24 pm


அமெரிக்காவின் ப்ஃளோரிடாவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது போட்டியில், 6 முறை மியாமி சாம்பியனானான் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 6-3, 6-4 என்ற கணக்கில் பிரான்சின் பெனாய்ட் பைரே தோற்கடித்து வெளியேற்றினார்.

மற்ற ஆட்டங்களில் முன்னணி வீரர்கள் குரோவேஷியாவின் மாரின் சிலிக், அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல போட்ரோ, பல்கேரியாவின் கிர்கோர் டிமிட்ரோவ், ஜப்பானின் கெய் நிஷிகோரி ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற கணக்கில் ரஷ்யாவின் நடாலியாவை வீழ்த்தி, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். அந்த சுற்றில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸை, வீனஸ் எதிர்கொள்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close