டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து யுகி பாம்ப்ரி விலகல்

  நந்தினி   | Last Modified : 26 Mar, 2018 06:33 pm


சீனாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி வீரர் யுகி பாம்ப்ரி விலகியுள்ளார். 

சீனாவின் தியான்ஜின் நகரில் வரும் ஏப்ரல் மாதம் 6-7 தேதிகளில் டேவிஸ் கோப்பைக்கான ஆசிய/ஓசியானியா குரூப் 1 இரண்டாவது சுற்றில் இந்தியா- சீனாவை எதிர்கொள்கிறது. இதற்கான இந்திய அணியில் 107-வது இடம் வகிக்கும் யுகி பாம்ப்ரி இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில், வயிற்று பகுதியில் ஏற்பட்டுள்ள தசை பிடிப்பு காரணமாக இப்போட்டியில் இருந்து பாம்ப்ரி விலகுவதாக அறிவித்துள்ளார். 

பாம்ப்ரிக்கு பதில், 246-வது இடத்தில் உள்ள பிரஜ்நேஷ் குன்னேஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டேவிஸ் கோப்பைக்கான இந்திய ஒற்றையர் பிரிவு அணியில், ராம்குமார் ராமநாதன் மற்றும் சுமித் நகல் இடம் பெற்றுள்ளனர். இரட்டையர் பிரிவு அணியில், லியாண்டர் பயஸ், ரோஹன் போபண்ணா இடம் பிடித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close