மியாமி ஓபன்: காலிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2018 01:26 pm


அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றப்பட்டார். 

இன்று நடந்த காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்சை 6-2, 6-3 என்ற கணக்கில் அமெரிக்காவின் டானியலி ரோஸ் கொலின்ஸ் வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் அரையிறுதிச் சுற்றில் கொலின்ஸ், லத்வியாவின் ஜெலினா ஒஸ்டாபென்கோவை எதிர்கொள்கிறார். 

மற்றொரு ஆட்டத்தில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்க்கோவாவை, 7-5, 6-3 என்ற கணக்கில் பெலருசிய நாட்டு வீராங்கனை விக்டோரியா அஸரென்கா வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். அந்த சுற்றில் அஸரென்கா, அமெரிக்காவின் ஸ்லோவானே ஸ்டீன்சுடன் மோதுகிறார். 

ஆண்கள் பிரிவில், அமெரிக்காவின் ஜான் இஸ்னர், அர்ஜென்டினாவின் டெல போட்ரோ காலிறுதியில் வெற்றி பெற்று, அரையிறுதிச் சுற்றில் மோத இருக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close