மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2018 11:40 am


உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் 11-வது முறையாக மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

பிரான்சில் நடைபெற்ற மான்ட்கார்லோ டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், நடால்- கெய் நிஷிகோரி நேற்று மோதினர். இதில் 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் நடால், நிஷிகோரியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியனானார். நடால் பங்கேற்ற 76-வது ஏடிபி டூர் போட்டி இதுவாகும். மேலும் 11 முறை மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் பட்டம் பெற்ற முதல் வீரர் என்ற மைல்கல்லையும் நடால் எட்டினார். 2005ம் ஆண்டு நடால் முதல்முறையாக இப்பட்டத்தை கைப்பற்றி இருந்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close