பிரெஞ்சு ஓபன்: 3-வது சுற்றுக்கு முன்னேறினார் கிவிடோவா

  நந்தினி   | Last Modified : 30 May, 2018 05:50 pm
petra-kvitova-enters-3rd-round-in-french-open

பிரெஞ்சு ஓபன் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு பெட்ரா கிவிடோவா முன்னேறினார். 

பாரிஸ் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் உலக தரவரிசையில் 8ம் இடம் வகிக்கும் செக் குடியரசின் கிவிடோவா, ஸ்பெயின் வீராங்கனை லாரா அறுபரென்னாவை எதிர்கொண்டார். இதில் கிவிடோவா 6-0, 6-4 என்ற நேர்செட் கணக்கில் அறுபரென்னாவை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார். 

இரண்டு முறை விம்பிள்டன் சாம்பியனான கிவிடோவா, களிமண் தரையில் தொடர்ந்து 13-வது வெற்றியை பதிவு செய்துள்ளார். அடுத்த சுற்றில் கிவிடோவா, ரோமானியாவின் அலெக்ஸாண்டரா துல்ஜெரு அல்லது எஸ்டோனியாவின் அனெட் கொன்டவைட்டை எதிர்கொள்வார்.  

2012ம் ஆண்டு முதல் கிவிடோவா பிரெஞ்சு ஓபன் காலிறுதிச் சுற்றை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு போட்டியில் 4ம் இடம் வகிக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா  6-3, 6-4 என்ற கணக்கில் ஸ்லோவாகியாவின் விக்டோரியாவை வீழ்த்தி, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close