பிரெஞ்ச் ஓபன் 3-வது சுற்றில் நோவக் ஜோகோவிச்

  Newstm Desk   | Last Modified : 31 May, 2018 12:29 pm
novak-djokovic-pasts-into-3rd-round-of-french-open

பிரெஞ்ச் ஓபன் மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார் முன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். 

பாரிஸ் நகரில் ரோலண்ட் கர்ரோஸ் என்றும் அழைக்கப்படும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று போட்டியில், 12 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜோகோவிச், 2 மணி நேரம் 18 நிமிடங்களில் 7-6 (7-1), 6-4, 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் ஜெயுமே அன்டோனி முனாரை வீழ்த்தினார். ஜோகோவிச் மூன்றாவது சுற்றில் ஜோகோவிச், ஸ்பானின் ராபர்டோ அகட்டுடன் மோதுகிறார். 

மற்ற போட்டிகளில் 4ம் இடம் வகிக்கும் பல்கேரியாவின் க்ரிகோர் டிமிட்ரோவ், 2ம் இடம் பெற்றிருக்கும் அமெரிக்காவின் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ், 8ம் இடத்தில் இருக்கும் டேவிட் கோபின் ஆகியோரும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர். 

பெண்கள் பிரிவில், நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப் 2-6, 6-1, 6-1 என அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். 

4ம் இடம் வகிக்கும் எலினா ஸ்விடோலினா மற்றும் 8ம் இடத்தில் இருக்கும் பெட்ரா கிவிடோவா 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close