பிரெஞ்சு ஓபன்: 3ம் சுற்றுக்கு முன்னேறினார் செரீனா

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2018 12:02 pm
serena-williams-enters-3rd-round-of-french-open

பிரெஞ்சு ஓபன் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் கம்பேக் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில், 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா- ஆஸ்திரேலியாவின் அஷ்லேயி பார்டியை, 2-வது சுற்றில் சந்தித்தார். பார்டியிடம் முதல் செட்டை இழந்த செரீனா, அதன் பின் வெறிகொண்டு எழுந்து அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றினார். முடிவில் 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் பார்டியை தோற்கடித்து, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார் செரீனா. 

மூன்றாம் சுற்றில் செரீனா, ஜெர்மனின் ஜூலியா கோர்ஜ்ஸை எதிர்கொள்கிறார். இது தவிர இரட்டையர் பிரிவில், செரீனா தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸுடன் இணைந்து 2ம் சுற்றில் வெற்றி பெற்று, 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றார். 

மற்ற ஒற்றையர் போட்டிகளில், நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப், மரியா ஷரபோவா, ஏஞ்சலிக் கர்பர், பிளிஸ்க்கோவா, முகுருசா ஆகியோரும் 3ம் சுற்றை எட்டினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close