பிரெஞ்சு ஓபன்: 4-வது சுற்றில் ஜோகோவிச், ஸ்வேரெவ்

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2018 12:26 pm
novak-djokovic-enters-fourth-round-at-french-open

பிரெஞ்சு ஓபன் நான்காவது சுற்று போட்டிக்கு நோவக் ஜோகோவிச் முன்னேறினார். 

பாரிஸ் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று போட்டியில், முன்னாள் சாம்பியன் நோவக் ஜோகோவிச், கடுமையாக போராடி 6-4, 6-7 (6/8), 7-6 (7/4), 6-2 என்ற கணக்கில் ராபர்டோ அகட்டை வீழ்த்தி நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார். 

அமெரிக்காவின் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ், 6-2, 3-6, 4-6, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் தமிர் டிஸுமஹரை தோற்கடித்து நான்காவது சுற்றை எட்டினார். இவரை தவிர, கெய் நிஷிகோரி, டோமினிக் தியம் ஆகியோரும் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர்.

4ம் இடம் வகிக்கும் க்ரிகோர் டிமிட்ரோவ், மூன்றாவது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார். 

பெண்கள் பிரிவில், கரோலின் வோஸ்னியாக்கி, பார்போரா ஸ்ட்ரிகோவா, மேடிசன் கீஸ், ஆகியோர் நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவு மூன்றாவது சுற்றில் அமெரிக்கா சகோதரிகள் வீனஸ் - செரீனா இணை, நான்காவது சுற்றை எட்டியது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close