பிரெஞ்சு ஓபன்: இந்திய வீரர்கள் தோல்வி

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2018 01:15 pm
yuki-sharan-clashes-out-from-french-open

பிரெஞ்சு ஓபன் போட்டியில் இந்திய முன்னணி போட்டியாளர்கள் தோல்வி கண்டு வெளியேறினர். 

ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று போட்டியில், இந்திய இணை யுகி பாம்ப்ரி - டிவிஜ் ஷரன், ஆஸ்திரியாவின் ஒலிவர் மார்ச் - குரோவேஷியாவின் மேட் பாவிக் மோதினர். 77 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில், ஒலிவர் மார்ச் - மேட் பாவிக் ஜோடி 7-5, 6-3 என்ற கணக்கில் யுகி பாம்ப்ரி - டிவிஜ் ஷரன் கூட்டணியை வென்றனர். 

கலப்பு இரட்டையரில், ஷரன்- ஜப்பானின் ஷுகோ அஓயமாவுடன் இணைந்து, ஸ்லோவாகியாவின் காடேறினா ஸ்ரெபட்னிக் - மெக்ஸிகோவின் சாண்டியாகோ கோன்சலேஸ் கூட்டணியுடன் மோதினார். 65 நிமிடம் நடந்த இப்போட்டியில் ஸ்ரெபட்னிக் - கோன்சலேஸ் 6-2, 3-6, 5-10 என ஷரன்- அஓயமாவை வென்றனர். 

மற்றொரு கலப்பு போட்டியில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா- ஹங்கேரியாவின் டீமே பபோஸ் கூட்டணி, 2-6, 3-6 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ் - சீனாவின் ஷுஅய் ஜாங்கிடம் 2-6, 3-6 வீழ்ந்தனர். 

முன்னதாக ஒற்றையர் பிரிவில் பாம்ப்ரி தோல்வி கண்டிருந்தார். தற்போது பிரெஞ்சு ஓபன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா மட்டுமே இந்தியா சார்பில் உள்ளார். இன்று நடக்கும் நான்காவது சுற்றில் அவர், பிரான்சின் ரோஜர் வஸ்ஸலினுடன் இணைந்து எதிரணியை எதிர்கொள்ள இருக்கிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close