விம்பிள்டன் போட்டியில் இருந்து ஜோகோவிச் விலகல்

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2018 12:03 pm
djokovic-decides-to-miss-wimbledon-after-french-open-defeat

பிரெஞ்சு ஓபன் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து விம்பிள்டனில் இருந்து விலகுவதாக நோவக் ஜோகோவிச் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன், பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், காயத்தில் இருந்து மீண்டு வந்த முன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதியை எட்டியிருந்தார். இந்த நிலையில், நேற்று நடந்த காலிறுதி போட்டியில் ஜோகோவிச் 6-3, 7-6 (7/4), 1-6, 7-6 (13/11) என்ற கணக்கில் சேச்சினாடோவிடம் வீழ்ந்தார். 

இந்த தோல்வியால் அதிர்ச்சி அடைந்த ஜோகோவிச், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். ஜோகோவிச், மூன்று முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் பெற்றவர். 

கடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வீழ்த்தப்பட்ட அவர், தரவரிசையில் 58-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டென்னிஸ் வாழ்க்கையில் 63 பட்டங்களை பெற்ற ஜோகோவிச், 2016ம் ஆண்டில் இருந்து நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 

ஜோகோவிச் கூறுகையில், "இது மிகவும் கடினம். வாழ்க்கையில் பல விஷயங்கள் கடினம் தான். அதிலும் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் எந்த ஒரு தோல்வியும் மிகவும் கடினம். அதுவும் பல போராட்டங்களுக்கு பிறகு பெறும் தோல்விகள்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close