பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் சிமோனா ஹாலேப்

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 11:09 am
simona-halep-cruises-into-third-french-open-semi-final

பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலேப். 

பிரான்சில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் காலிறுதியில், சிமோனா ஹாலேப் 6-7(2), 6-3, 6-2 என்ற கணக்கில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை தோற்கடித்து, தனது மூன்றாவது ரோலண்ட் கர்ரோஸ் அரையிறுதியை எட்டினார். அந்த சுற்றில் ஹாலேப், கார்பின் முகுருசாவுடன் மோதுகிறார். கடந்த ஆண்டு ஹாலேப் பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றில் ஒஸ்டாபென்கோவிடம் தோல்வி அடைந்து பட்டத்தை தவறவிட்டார். அவர் இந்த முறை தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறார். 

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், மேடிசன் கீஸ் - ஸ்லோவானே ஸ்டீபன்ஸ் மோதுகின்றனர். ஆண்கள் பிரிவில் நடக்க இருந்த காலிறுதிப் போட்டி மழை காரணமாக தடைப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close